Thursday, February 19, 2015

வந்துட்டேன் வந்துட்டேன் :)

எதில் மகிழ்ச்சி!!!
ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.
அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.
’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

ரொம்ப நாள் (2 வருசம் கழிச்சி ஆஅவ்வ்வ்வ்வ்) இப்போ தான் வந்ததாலே என்ன எழுதுறது என்று தெரியல, அதனால் ஒரு வாட்ஸ் அப் மெஸேஜ் காப்பி பேஸ்ட் ;)

Friday, January 6, 2012

தவம் .....!

தவம் என்பது இந்து தொன்மவியலில் உள்ள ஒரு கருத்துரு ஆகும். ஒருவர் தன்னை வருத்தி முழுப் பக்தியுடன் இறைவனை நோக்கி தவம் செய்தால், அதற்கு இறைவன் கட்டுப்பட்டு வரம் வழங்கவேண்டும் என்பது இதன் அடிப்படை.
தவம் என்றால் மனதை அடக்குதல். மன ஆற்றலை அதிகப்படுத்துதல் என்பது அல்ல. தவம் என்றால் இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், உயிரற்ற பொருட்களும் உருவாக காரணமான மூல ஆற்றலை பற்றி விழிப்புணர்வு பெறுதலும் அவ்வாற்றலை வாழ்வில் பயன் படுதலுமே தவம் ஆகும்.

அந்த ஆற்றல் எங்கும் நிறைந்தே இருக்கிறது. நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் நிறைந்தே இருக்கிறது. அதை உணர்வதற்கு மனதை கடந்து செல்ல வேண்டும் . நாம் நுண்ணிய மனோ நிலைக்குச சென்று, பின் மனமே இல்லா நிலைக்கு அதாவது அப்பால் இருக்கும் பொருளை இப்பால் காட்டும் தூய கண்ணாடி போன்ற மனோநிலைக்கு செல்ல வேண்டும் .

கண், காது , மூக்கு , நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐந்து புலங்களில் ஒரு புலனின் செயல்பாட்டை குறைத்தால் மற்ற புலன்களின் ஆற்றல் அதிகமாகும் உதாரணத்திற்கு கண் பார்வை அற்றவர்களுக்கு கேட்க்கும் திறன் அதிகமாயிருப்பதைக்காணலாம் . தவம் செய்யும் பொழுது நாம் ஐந்து புலன்களின் சலனங்களை குறைத்து நுண்ணிய மனோநிலைக்கு செல்கிறோம். பின் மனமற்ற நிலைக்கு செல்லுகிறோம். (இதை வேதங்களில் மனோநாசம் என்றும் சொல்லுவார்கள்.) அப்பொழுது உள்ளுணர்வு விழிப்படைகிறது .அங்கு நம்மிலும் நம்மைசுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கும் மூல ஆற்றலை உணர்கிறோம். எல்லாவற்றிற்கும் மூலமானது அந்த ஒரே ஆற்றல் என உணர்கிறோம். நாமும் அவ்வாற்றலே என உணர்கிறோம்.

தவத்தை கண்டிப்பாக ஒரு குருவின் உதவியுடனே கற்க வேண்டும். அவ்வாறன்றி தன்னிச்சையாகவோ நூல்களில் படித்தோ செய்யக்கூடாது . காரணம் நீங்கள் எதையாவது தவறாக செய்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஒருசிலர் தவறாக செய்துவிட்டு, யோகம் தவம் செய்ததால் எனக்கு இவ்வாறு ஆகிவிட்டது என்று பலரிடம் சொல்லி யோகம் தவத்தின் உன்னதம் மக்களிடம் பரவுவதில் ஒரு தடையை ஏற்படுத்தி விடுகிறார்கள். இவ்வாறு சிலர் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் நிலை ஏற்படுவதாலேயே குருவின்றி கற்றுக்கொள்ள கூடாது என்கின்றனர்.

யோகம்
யோகம் என்பது தவம் செய்ய ஏதுவான வகையில் உடலையும் உடலின் உள் அவயங்களையும் தயார் செய்யும் பயிற்சியே யோகம் ஆகும் . யோகத்தில் ஆசனம் , பிராணயாமம் முக்கியமானதாகும்.

ஆசனம்
தவம் செய்ய நீண்ட நேரம் ஒரு நிலையில் அமரவேண்டும் . அவ்வாறு அமர்ந்திருக்கும்போது உடலின் எந்த இடத்திலும் உறுத்தலோ வலியோ ஏற்படக்கூடாது. அவ்வாறு உறுத்தலோ வலியோ ஏற்பட்டால் தவத்தில் முழு மனமும் லயிக்காது. தவம் செய்ய இடையூறு ஏற்படா வண்ணம் அமரும் முறையே ஆசனம் எனப்படுகிறது.

பிரணாயாமம்
உடலின் மூல ஆற்றல் உடலெங்கும் 72000 நாடிகளின் வழியாக பரவுவதாக சித்தர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை மூலத்திலிருந்து மூன்றாகப் பிரிந்து, பின்பு அவை பலகிளைகளாக பிரிந்து ஆற்றலை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது . அந்த முக்கிய மூன்று நாடிகளை இடகலை, பிங்கலை, சுழுமுனை (இவற்றை சந்திர கலை, சூரிய கலை, சுசும்னா ) என்பர். இவை முதுகு தண்டில் முறையே இடது, வலது, நடு மையத்தில் கீழிருந்து மேலாக செல்கிறது. சாதாரணமாக நாம் முச்சு விடும்போது இடது நாசித்துவாரத்தின் மூலமோ அல்லது வலது நாசித்துவாரத்தின் மூலோமோ தான் காற்று செல்லும். இடது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் இடகலை நாடியின் மூலமும், வலது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் பிங்கலை நாடியின் மூலமும், இரண்டு நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் சுழுமுனை நாடி வழியாகவும் உடலில் பரவுகிறது. ஆற்றல் சுழுமுனை நாடி வழியாக பரவும் போதுதான் நாளமில்லா சுரப்பிகள் நன்முறையில் செயல்பட்டு உடலில் (cosmic energy) வான் காந்த ஆற்றல் கிரகிக்கப் படுகிறது. இதற்காகவே நாடிசுத்தி, தண்டுவட சுத்தி ஆகிய பிராணாயாம பயிற்சிகள் அவசியமாகிறது.......

நான் யார் ..!

இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரனையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு ‘நான் ஆக முடியாது. முதல் காரணம் இது ‘என் உடம்பு என்கிறோம். ‘என் உடம்பு, ‘என் கண், ‘என் காது, ‘என் ருசி, ‘என் வாசனை – என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ ‘நாம் இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் ‘நாம்’ இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ ‘நாம் இல்லை. ‘நான், நான் என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங்கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே ‘நாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான 'நான்'....!

Monday, January 2, 2012

சுவாரஸ்யம் !

இன்னைக்கி காலைலே பல்லுவிலகிக்கிட்டு இருக்கும்போது , நேத்து என் நண்பன் ஒருத்தன் பேச்சி வாக்கிலே "மச்சி , அவன பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைச்சிய , அவன் எதாவது ஓவரா பண்ணினானா சொல்லுடா , அவன் வண்டவாளத நான் தண்டவாளத்துல ஏத்திடுறேன்." அப்படி நு சொன்னான் ...
அத யோசிச்சிகிட்டே , இவன் எப்படி வண்டவாளத்த தண்டவாளதுல ஏத்துவான், என்ன ஒரு சுவாரஸ்யமான பேச்சு வழக்கு தமிழ்ல , Rhyminga இருக்குன்றதுக்காக அர்த்தமே இல்லாம இருந்தாலும் சுவாரஸ்யமாதான் இருக்குனு நினைச்சிகிட்டே இருக்கும் போது ..
சமையல் கட்டிலே இருந்து என் பொண்டாட்டி குரல் ,,,
கோவமா ....
"ஏங்க பல்ல விளகுரீன்களா, இல்லே படம் எடுக்குறீங்களா"

நாம தான் டென்ஷன் பார்டி ஆச்சே !
"என்னடி கேள்வி இது, உனக்கு என்ன கிறுக்கு கிருக்கு புடிச்சி இருக்கானு" நம்ம சிந்தனை ஓட்டம் வாய் வழியா வெளில வந்துடிச்சி ..

உடனே என் பொண்டாட்டி
"எனக்கு எல்லாம் ஒன்னும் புடிக்காது , ஏன்னா ! அது கூட தானே குடும்பம் நடத்துறேன்"....!

அப்போ தான் என் மண்டைல உரைச்சிது , வாங்கி கட்டிகினா தான் தெரியும் போல, எல்லா பேச்சிக்கும் ஒரு அர்த்தம் இருக்குனு.

வடிவேலு அண்ணே !!

எல்லாரும் ப்ளாக் ல எழுதி தள்றாங்களே, நாமளும் எழுதலாம்னு ஆரம்பிச்சா நமக்கு நாக்கு தான் வெளில தள்ளுது. ஆரம்பிச்சிட்டேன் என்ன எழுதருதுன்னு தான் மண்ட காயுது ..
நம்ம வடிவேலு அண்ணே ஒரு படத்துல ....நானும் ரவுடி நானும் ரவுடி ..பாத்துக்குங்க எல்லாரும், பாத்துக்குங்க எல்லரும்ற கதையா ஆகிடிச்சி என் கத ...

எது எப்படி இருந்தாலும் , என்னதான் ஆனாலும் நான் எழுதுறது எழுதுறதுதான் .....
படிக்கிற நீங்க தான் என்ன பாராட்ட போறீங்கள, இல்லே போட்டு தள்ள போறீங்களானு போக போக தான் தெரியபோது ........

பக்கிரி பெயர் காரணம்


பக்கிரிராஜா அப்படின்னு பெயர் வெச்ச தாலே நான் பக்கிரினும் சொல்லேமட்டேன் , இல்லேனும் சொல்லமாட்டேன் !
என்னபத்தி அப்புறம் பேசலாம் , இப்போ இந்த பெயர் காரனத்த மட்டும் தெரிஞ்சிகோங்க.

போன வாரத்துல ஒரு நாள், ஒரு பழைய குமுதம் வார இதழ வேலைவெட்டி இல்லாம புரட்டிக்கிட்டு இருக்கும்போது , குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் சார் ஷீரடி சாய்பாபா பத்தி ஒரு தொடர் கட்டுரை எழுதி இருந்ததை பார்க்க நேர்ந்தது . அந்த கட்டுரையில ஷீரடி சாய்பாபா பத்தி குறிப்பிடும்போது , அவர் காலைலே எழுந்துகொள்ளும் போது பக்கிரியகவும், பிறகு பக்தர்களின் அன்பளிப்பை சேரும்போது ஒரு ராஜாவாகவும், அதை மாலையில் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும் போது ஒரு வள்ளலாகவும் , இரவு அனைத்தையும் தானமாக கொடுத்தபின் மீண்டும் பக்கிரியகவும் இருப்பார் மகான் ஷிர்டி சாய்பாபா என்று ஆசிரியர் குறிபிடுகிறார்.

பக்கிரி என்றல் தன்கென்று ஒன்றும் இல்லாதவன், என்று என் மரமண்டையில உறைக்கிற மாதிரி பொட்டுன்னு அடிச்சதாலே , இங்கே நமக்கு மட்டும் என்னத்த வாழுது, ஒரு விதத்துல நான் கூட நம் கருணை கடலான ஷிரிடி சாய்பாபா போல பக்கிரி தானே , வரும்போதும் ஒன்றும் இல்லை போகும்போதும் ஒன்றும் எடுதுகிட்டும் போகபோறது இல்லே.

அதனால, இறைவனே எனக்கு இந்த ப்ளாக் ஆரம்பிக்க ஒரு பெயர் தந்ததா மகிழ்ந்து, மகானின் விருப்பத்தின் பெயரில் நான் இந்த பெயரை என் ப்ளாக்குக்கு சூடிக்கொண்டேன்.

இது தான் நான் இந்த ப்ளாக்குக்கு பெயர் வாய்த்த ஒரு குட்டி வரலாறு...!!

Sunday, January 1, 2012

புத்தாண்டு வரவு !

ப்ளாக் ஓபன் பண்ணி இரண்டு வருடம் ஆகிறது , இன்று தான் என் முதல் கன்னி எழுத்தை அரங்கேற்றுகிறேன் ...!!
வரும் காலங்களில் நிறைய எழுதுவேன் உங்களுக்காக , நமக்காக !!

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..